பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரிலீஸ் எப்போது தெரியுமா? இயக்குனரே சொன்ன அப்டேட்
பொன்னியின் செல்வன்
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.
பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இரண்டாம் பாகம்
மேலும் இன்று முதல் படத்தின் ப்ரோமோஷன் சென்னையில் தொடங்கியது, இதனை தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு செல்ல இருக்கின்றனர் படக்குழு. இதனிடையே நேற்று நடந்த இப்படத்தில் ப்ரோமோஷன் பேட்டியில் இயக்குனர் மணிரத்னம் முக்கிய அப்டேட்-யை கூறியுள்ளார்.
ஆம், பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியான 6 அல்லது 9 மாதங்களில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என தெரிவித்துள்ளார். அதாவது அப்படம் அடுத்த வருடம் சம்மரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இப்படத்தின் முதல் பாகத்திற்கு எந்தளவு வரவேற்பு கிடைக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பார்த்திபனுடன் விவாகரத்து பெற்றது ஏன்?- முதன்முறையாக வெளிப்படையாக கூறியுள்ள நடிகை சீதா