விவாகரத்தான நடிகருக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே.. அதுவும் யாருடைய இயக்கத்தில் தெரியுமா
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கும் பூஜா ஹெக்டே தற்போது தமிழில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.
தமிழில் பூஜா

முகமூடி படத்திற்கு பிறகு, பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழில் கதாநாயகியாக, பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் பூஜா.
இந்நிலையில், தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்திருக்கும் பூஜா ஹெக்டே அடுத்ததாக, வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழில் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஹீரோவாக நாகசைதன்யா

இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க, பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவிடம் பேச்சு வார்த்தை நடந்துவருவதாக தெரிவிக்கின்றனர்.
நடிகர் நாகசைதன்யாவிற்கும், நடிகை சமந்தாவிற்கும் சில மாதங்களுக்கு முன்பு தான் விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது.
சமந்தா உடனான சர்ச்சைக்கு விளக்கமளித்த நடிகை பூஜா ஹெக்டே !