வெற்றிமாறன் - கவுதம் மேனன் கூட்டணியில் புதிய படம்.. ஹீரோ இந்த முன்னணி நடிகரா
கவுதம் மேனன்
இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் dominic and the ladies' purse. மம்மூட்டி ஹீரோவாக நடித்துள்ள இப்படம் வருகிற 23ஆம் தேதி வெளியாகிறது.
புதிய படம்
இப்படத்திற்கு பின் கவுதம் மேனன் யாரை வைத்து புதிய படத்தை இயக்கப்போகிறார் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை. ஆனால், வெற்றிமாறனின் கதையை வைத்து கவுதம் மேனன் இயக்கப்போவதாக சமீபத்தில் தகவல் ஒன்று வெளியானது.
இப்படத்தில் சிம்பு நடிக்கப்போவதாக கூறப்பட்ட நிலையில், சிம்பு இல்லை, நடிகர் ரவி மோகன் தான் இப்படத்தின் ஹீரோ என்றனர்.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டியில் தனது அடுத்த படம் குறித்து பேசிய இயக்குநர் கவுதம் மேனன், "வெற்றிமாறன் கதையை வைத்து படம் இயக்குவதற்கான டிஸ்கஷன் போய்க்கொண்டு இருக்கிறது. அது மிகவும் சுவாரஸ்யமான கதையாகும். இப்படத்தில் ஹீரோவாக ரவி மோகன் நடிப்பதற்கு பேச்சு வார்த்தை நடந்து வருகிறது" என அவர் கூறியுள்ளார்.
விரைவில் இதற்கான அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர்களை நடுநடுங்க வைத்த சம்பவம்... அட்டகாசமான ப்ரொமோ காட்சி Manithan

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னர் சார்லஸ்: ராஜ குடும்பத்துக்கு கவலையை உருவாக்கியுள்ள விடயம் News Lankasri
