இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க
விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், தற்போது சினிமாவிலிருந்து விலகி அரசியலில் களமிறங்கியுள்ளார். ஜனநாயகன்தான் விஜய்யின் கடைசி படமாகும். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவரவுள்ளது.
விஜய் அரசியலில் களமிறங்கிய பின் 2026 எப்படி இருக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் உள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன் கரூரில் விஜய் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அந்த சமயத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதன் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். இது மிகப்பெரிய அதிர்வலையை இந்திய அரசியலில் ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் வீடியோகாலில் விஜய் பேசியுள்ளார். தனக்கு அனுமதி கிடைத்தவுடன் விரைவில் அவர்களை சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். அதே சமயம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யார் அந்த நடிகர்?
திரையுலகில் உள்ள பிரபலங்களின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகும். அந்த வகையில், நடிகர் விஜய்யுடன் பிரபல நடிகர் ஒருவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அவர் வேறு யாருமில்லை வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான ஹரிஷ் கல்யாண்தான். கல்லூரி படிக்கும் சமயத்தில் தனது நண்பர்களுடன் இணைந்து விஜய்யுடன் ஹரிஷ் கல்யாண் எடுத்துக்கொண்ட புகைப்படம்தான் இது.