தளபதி 67 படப்பிடிப்பில் கவுதம் மேனனுடன் இணைந்து நடிக்கும் முன்னணி இயக்குனர்.. யார் தெரியுமா
தளபதி 67
விஜய் நடிப்பில் வாரிசு படத்திற்கு பின் உருவாகி வரும் படம் தான் தளபதி 67. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் துவங்கியுள்ளது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து அர்ஜுன், திரிஷா, கவுதம் மேனன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இதுவரை இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.
ஆனால், வாரிசு படத்தின் ரிலீசுக்கு பின் தளபதி 67 படத்தின் அறிவிப்பு வெளியாகும் என லோகேஷ் கூறியுள்ளார். அதற்காக தான் ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
முன்னணி இயக்குனர்
இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மிஸ்கின் நடிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. ஆனால், அவர் நடிக்கவில்லை என அதன்பின் தகவல் வெளியானது.

சில நாட்களாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் மிஸ்கின் இருந்ததாக தெரியவந்துள்ளது.
மேலும், கவுதம் மேனனுக்கும், மிஸ்கினுக்கும் உள்ள காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதன்முலம் மிஸ்கின் இப்படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.
லவ் டுடே வெற்றிக்கு பின் அதிகரித்த பிரதீப் ரங்கநாதத்தின் சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா