இந்தியன் 2 திரைப்படத்தில் கமலுடன் இணையும் மற்றொரு ஹீரோ! வெளிவந்த சுவாரஸ்யமான அப்டேட்
இந்தியன் 2
ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் கூட்டணியில் கடந்த 2017ஆம் அறிவித்த திரைப்படம் இந்தியன் 2. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
2019ஆம் ஆண்டில் இருந்து இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற துவங்கியது. எதிர்பாராத விதமாக 2020ஆம் பிப்ரவரி மாதம் நடந்துகொண்டிருந்த படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தார்கள்.
இந்த விபத்தில் இருந்து நூலிழையில் கமல் ஹாசன் உயிர் தப்பினார். விபத்தின் காரணமாக படப்பிடிப்பு நின்றுபோனது. சில மாதங்களுக்கு பின் துவங்கவிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு, கொரோனா தாக்கம் காரணமாக அப்படியே நின்றுபோனது.
இதனை தொடர்ந்து விவேக், நெடுமுடி வேணுவின் மரணம் மற்றும் சில பிரச்சனைகள் படத்திற்கு பின்னடைவாக அமைந்தது. இந்தியன் 2 திரைப்படம் இனி உருவாகாது என்று ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் செய்திகள் வெளிவந்தன.
மீண்டும் துவங்கவுள்ள படப்பிடிப்பு
இந்நிலையில், அணைத்து பிரச்சனைகளும் முடிந்து மீண்டும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு முதலில் இருந்து துவங்கவுள்ளதாக தகவல் வெளியானது.
கர்ப்பமாக இருந்த காரணத்தினால் இந்தியன் 2வில் இருந்து காஜல் அகர்வால் வெளியேறுகிறார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இப்படத்தில் நடிப்பதாக காஜல் அகர்வால் உறுதி செய்துள்ளார்.
வருகிற செப்டம்பர் 13ஆம் தேதியில் இருந்து இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடித்திருந்த சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி ஆகியோரு அதே கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் என்று தெரிவிக்கின்றனர்.
கமலுடன் இணைந்த முன்னணி நடிகர்
இந்நிலையில், இப்படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நவரச நாயகன் கார்த்திக் கமிட்டாகியுள்ளாராம். கமல் ஹாசன் - கார்த்திக்கின் கூட்டணி இந்தியன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம், இன்னும் என்னென்ன சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகவுள்ளது என்று..

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
