கமல் ஹாசன் பட இயக்குனர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்
கே. விஸ்வநாத்
தெலுங்கு திரையுலகில் மாபெரும் இயக்குனர்களில் ஒருவர் கே. விஸ்வநாத். இவர் இயக்கிய பல படங்கள் பல ஹீரோக்களை உருவாக்கியுள்ளது.
தெலுங்கில் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த சாகர சங்கமம் தான் தமிழில் வெளிவந்த சலங்கை ஒளி. இப்படம் கமல் ஹாசனுக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்ததை நாம் மறக்கவே முடியாது.
மேலும், சிப்பிக்குள் முத்து, ஸ்வர்ண கமலம் உள்ளிட்ட பல படங்களையும் இயக்கியுள்ளார். இயக்குனராக மட்டுமின்றி ஒரு நடிகராகவும் தனது திரை வாழ்க்கையில் பயணம் செய்துள்ளார்.
தமிழில் வெளிவந்த யாரடி நீ மோகினி, ராஜபாட்டை, உத்தமவில்லன், லிங்கா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மறைவு
இந்நிலையில், இயக்குனரும், பிரபல நடிகருமான கே. விஸ்வனாத் {92} வயது மூப்பு காரணமாக மரணமடைந்துள்ளார்.
இவருடைய மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரையுலகை சேர்ந்த பலரும் சமூக வலைத்தளத்தில் தங்களுடைய அஞ்சலியை தெரிவித்து வருகிறார்கள்.
தளபதி67 பூஜையில் பங்கேற்ற பெண் குழந்தை யார்? இந்த நடிகரின் மகள் தானா