ராதே ஷ்யாம் பட நஷ்டத்தால் சம்பளத்தில் பாதியை திருப்பி கொடுத்த பிரபாஸ் !
பிரபாஸின் ராதே ஷ்யாம்
இன்று பான் இந்தியா அளவில் தனது மார்க்கெட்டை விரிவு படுத்தி வைத்துள்ள தென்னிந்திய நட்சத்திரம் நடிகர் பிரபாஸ்.
பாகுபலி படத்திற்கு பின் இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து பான் இந்தியா அளவில் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது.
அதன்படி இவர் நடிப்பில் சமீபத்தில் பிரமாண்டமாக வெளியான திரைப்படம் ராதே ஷ்யாம், பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட ராதே ஷ்யாம் திரைப்படம் முழுநில காதல் திரைப்படமாக இருந்தது. '
நஷ்டத்தை ஈடுசெய்ய
ஆனால் படம் வெளியானதில் இருந்து மோசமான விமர்சனங்களையே பெற்றது, இதனால் இப்படத்தின் வசூல் செம அடிவாங்கியுள்ளது.
இந்நிலையில் தயாரிப்பாளருக்கு மட்டும் ரூ.100 கோடி அளவில் நஷ்டம் ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனால் தற்போது நஷ்டத்தை ஈடுசெய்ய நடிகர் பிரபாஸ் இப்படத்திற்காக வாங்கிய 100 கோடி சம்பளத்தில் 50 கோடியை திரும்பி தந்துள்ளதாக செய்தி பரவி வருகிறது. ஆனால் இது எந்தளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.
தீனாவை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் சீசன் 3 பிரபலம் ! அட இவரா..

விஜய் கட்சியுடன் கூட்டணி சேரும் வாய்ப்பு வந்தது; ஆனால்.. - திருமாவளவன் பரபரப்பு பேச்சு IBC Tamilnadu
