தாக்கியதாக திவ்யா நாடகம் ஆடுகிறார்.. எல்லாம் இதற்கு தான்! நடிகர் அர்ணவ் போலீஸில் புகார்
சன் டிவியின் கேளடி கண்மனி தொடரில் நடித்து இருந்தவர் திவ்யா. பெங்களூரை சேர்ந்த அவர் அதற்கு பிறகு மகராசி, செவ்வந்தி உள்ளிட்ட தொடர்களில் நடித்தார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு 5 வயது குழந்தை இருக்கிறது.
திவ்யா - அர்னவ்
கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த அவருக்கு கேளடி கண்மணி சீரியல் நடிகர் அர்னவ் உடன் காதல் ஏற்பட்டு இருக்கிறது. அவர்கள் அதற்கு பிறகு திருமணமும் செய்துகொண்டிருக்கிறார்கள். அர்னாவ் இஸ்லாமியர் என்பதால் மதம் மாற சொல்லி கட்டாயப்படுத்தி திவ்யாவை மதம் மாற்றி இருக்கிறார். அதற்கு பிறகு தான் திருமணமும் நடைபெற்று இருக்கிறது.
மூன்று மாதங்களுக்கு முன்பு இந்து முறைப்படி திருமணமும் நடைபெற்று இருக்கிறது. அதன் பின் திவ்யா கர்பமாகி இருக்கிறார்.
இந்நிலையில் அர்னவ் தற்போது திவ்யாவை விட்டுவிட்டு வேறொரு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார் என கூறப்படுகிறது.
தாக்குதல்
இந்நிலையில் அர்னவ் தன்னை தாக்கியதில் தனக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டு இருக்கிறது என கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு இருக்கிறார் நடிகை திவ்யா.
இருவரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த போது வீடு வாங்கிய நிலையில் அதற்கான இஎம்ஐ திவ்யா தான் கட்டினாராம். திவ்யாவை அர்னவ் தாக்கும்போது அவர் தற்போது தொடர்பில் இருக்கும் பெண்ணும் லைவ்வில் இருந்திருக்கிறார்.
திவ்யாவின் கண்ணீர் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அர்ணவ் விளக்கம்
இந்நிலையில் அர்னவ் சென்னை ஆவடி காவல் ஆணையரிடம் புகார் அளித்து இருக்கிறார். திவ்யா வீடியோவில் சொன்னது சுத்த பொய் என கூறிய அவர், நான் அங்கு இல்லை என்பதற்க்கு சிசிடிவி ஆதாரம் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
கருவை கலைக்க இப்படி ஒரு நாடகம் ஆடுகிறார் அவர் எனவும் குற்றம்சாட்டி இருக்கிறார்.
எல்லாத்துக்கும் ஒரே எக்ஸ்பிரஷன்.. முன்னணி ஹீரோவை தாக்கி கிண்டல் செய்த ஜெயம் ரவி! யாராக இருக்கும்?