ரூ. 500 கோடியளவில் உருவாகும் இயக்குநர் ராஜமௌலியின் அடுத்த திரைப்படம்! இப்படி தான் இருக்கும்
S.S.ராஜமௌலி
இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குனர்களில் ஒருவர் S.S.ராஜமௌலி, மேலும் வசூலிலும் இவரின் திரைப்படங்கள் தான் தொடர்ந்து சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
அப்படி பாகுபலி படங்களின் வசூல் சாதனைகளை தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான திரைப்படம் RRR.
பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் அனைத்து தரப்பினரும் கவர்ந்தது, எப்போதும் போல இந்த RRR திரைப்படமும் உலகமுழுவதும் 1000 கோடிக்கும் வசூல் செய்து சாதனை படைத்தது.
அடுத்த பிரம்மாண்டம்
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்துள்ள இயக்குநர் ராஜமௌலி தனது அடுத்த திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட்டை கொடுத்திருக்கிறார். ஆம் மகேஷ் பாபுவை வைத்து அவர் இயக்கும் திரைப்படம் “Globetrotting Action Adventure”-ஆக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
அதாவது உலகம் முழுவதும் பரவலாக பயணம் செய்ய கூடிய அதிரடி சாகச திரைப்படமாக இருக்கும் என சூசகமாக தெரிவித்து இருக்கிறார் இயக்குநர் ராஜமௌலி.
ப்ரின்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகாதா! வேறு எப்போது ரிலீஸ் தெரியுமா