ஜெயிலர் திரைப்படம் முடியும் முன்பே நடைபெறும் ரஜினியின் அடுத்த படத்திற்கான பூஜை !
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இவர் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் அப்படத்தின் அடுத்த அப்டேட்டை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினி ஜெயிலர் திரைப்படம் முடியும் முன்பே அவரின் திரைப்படம் குறித்த அப்டேட்ஸ் பரவ தொடங்கியது. அதன்படி லைக்கா தயாரிக்கும் அப்படத்தை டான் திரைப்பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.
மேலும் நேற்று லைக்கா நிறுவனம் தயாரிக்கும் ரஜினி இரண்டு திரைப்படங்களின் ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
அதுமட்டுமின்றி அப்படத்தின் தொடக்க பூஜை வரும் நவம்பர் 5 ஆம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் பெயருக்கு முன் தன் பெயரை போட சொன்ன விஜய்.. உண்மையை உடைத்த நபர்

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
