இதுவே நானா இருந்த தூக்குல தொங்கியிருப்பேன் - பிரபலத்திடம் ரஜினி சொன்ன ரகசியம்..
பிளாக் பஸ்டர் படையப்பா
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் படையப்பா.
பக்கா பேமிலி என்டேர்டைனர் திரைப்படமான படையப்பா திரைப்படத்தை இன்றும் ரசிக்கும் கூட்டம் அதிகம்.
இதனிடையே திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 23 வருடங்கள் ஆகியுள்ளது, இதனை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் அப்படம் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர்.

கன்னல் கண்ணன் சொன்ன ரகசியம்
அதன்படி அப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரான கனல் கண்ணன் பேட்டி ஒன்றில் ரஜினி தன்னிடம் சொன்ன விஷயம் குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது "கே.எஸ். ரவிக்குமார் என்னை எப்போதும் செட்டில் ஸ்டண்ட் செய்யும் போது பயங்கரமாக திட்டுவார். என்னை அறிமுகம் செய்ததே அவர் தான் என்பதால் அவர் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு.
அப்படி அவர் என்னை பயங்கரமாக திட்டிய போது ரஜினி தன்னை தனியாக அழைத்து சென்று 'இதுவே அவர் என்னை அப்படி திட்டியிருந்தால் தூக்கில் தொங்கியிருப்பேன்'-னு விளையாட்டாக சொன்னார்" என கன்னல் கண்ணன் பேசியுள்ளார்.

விஜய்யுடன் போக்கிரி படத்தில் நடித்த நடிகை தற்போது எப்படி உள்ளார் பாருங்க..!