ரஜினியின் அண்ணனுக்கு மாரடைப்பு.. மருத்துவமனையில் அனுமதி
ரஜினிகாந்த் அண்ணன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த கூலி திரைப்படம் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது.

ஆனால், வசூலில் ரூ. 525+ கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் அண்ணன் சத்யநாராயண ராவ்வை நாம் அனைவரும் அறிவோம். ரஜினியின் திரைப்பட விழாக்களில் அவர் கலந்துகொள்வார்.
மருத்துவமனையில் அனுமதி
இந்த நிலையில், சத்யநாராயண ராவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தனது அண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவலை அறிந்த நடிகர் ரஜினிகாந்த், உடனடியாக பெங்களூரு புறப்பட்டு சென்றுள்ளார்.