கவுதம் மேனன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. கதை கேட்டு ஓகே சொன்ன ரஜினி

By Kathick Mar 21, 2024 07:30 AM GMT
Report

துருவ நட்சத்திரம்

இயக்குனரும், நடிகருமான கவுதம் மேனன் தன்னுடைய துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறார். கடந்த 6 ஆண்டுகளாக இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

ஆனால், தொடர்ந்து ஏற்படும் பண பிரச்சனையின் காரணமாக இப்படத்தை கவுதம் மேனனால் வெளியிட முடியவில்லை. இப்படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார். ஆனால், இப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது சூர்யா தான். ஆனால், இப்படத்தின் மீது சூர்யாவிற்கு சரியான உடன்பாடு இல்லாத காரணத்தில் இப்படத்தில் அவர் நடிக்க மறுத்துவிட்டார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. கதை கேட்டு ஓகே சொன்ன ரஜினி | Rajinikanth Gautham Menon Movie

விஜயகாந்த் மகனை இயக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குனர்.. தோல்விக்கு பின் இந்த முடிவு

விஜயகாந்த் மகனை இயக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குனர்.. தோல்விக்கு பின் இந்த முடிவு

துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் விக்ரமிற்கு முன் சூர்யா நடிக்கவிருந்தார் என்பது மட்டுமே இதுவரை தெரிந்த விஷயம். ஆனால், முதல் முறையாக இதுவரை பலரும் தெரியாத விஷயம் குறித்து கவுதம் மேனன் கூறியுள்ளார்.

ரஜினியை இயக்கவிருந்த கவுதம்

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, கவுதம் மேனனை அழைத்து, ரஜினிகாந்திற்கு ஒரு நல்ல கதை இருந்தா சொல்லுங்க என கேட்டுள்ளார். அப்போது துருவ நட்சத்திரம் படத்தின் கதையை ரஜினிகாந்த் இடம் கூறியுள்ளார் கவுதம் மேனன். இப்படத்தின் கதையை கேட்டவுடன் ரஜினிக்கு பிடித்துவிட்டதாம். படம் பண்ணலாம் என ஓகே சொல்லவிட்டாராம்.

கவுதம் மேனன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. கதை கேட்டு ஓகே சொன்ன ரஜினி | Rajinikanth Gautham Menon Movie

ஆனால், அதன்பின் ரஜினி சார் இப்போ இந்த படம் பண்ணல, கபாலி தான் பண்ண போறாரு என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு கூறினாராம். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கவுதம் மேனன் இதை பகிர்ந்துகொண்டார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US