தனுஷ் பட நடிகருடன் விளையாடும் ரம்யா பாண்டியன்!. வீடியோ வைரல்

Dhiviyarajan
in பிரபலங்கள்Report this article
ரம்யா பாண்டியன்
2015 -ம் ஆண்டு வெளியான டம்மி பட்டாசு என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இப்படம் இவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.
இதையடுத்து ஜோக்கர் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனமே கொடுத்தனர். இருப்பினும் ரம்யா பாண்டியனுக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் வரவில்லை.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானார். தற்போது ரம்யா பாண்டியன் சில படங்களில் நடித்து வருகிறார்.
வீடியோ
சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரம்யா பாண்டியன், சமீபத்தில் நடிகர் சசி சித்தார்த் உடன் சேர்ந்து badminton விளையாடி உள்ளார்.
தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. நடிகர் சசி சித்தார்த் தனுஷின் மாறன், அஜித்தின் விவேகம், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு நாள் முன்பு திருமணம் செய்து இருக்கலாம்!.. வேதனையை பகிர்ந்த தீபிகா