கமல் அப்படிப்பட்டவர், தகுதியே இல்லை.. ரோபோ ஷங்கர் ஓபன் டாக்
ரோபோ ஷங்கர்
சின்னதிரை நிகழ்ச்சிகளில் மூலம் பிரபலமான ரோபோ ஷங்கர், பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து அசத்தி வந்தார்.
சில மாதங்களுக்கு ரோபோ ஷங்கர் உடல் மெலிந்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு நிலையில் தற்போது அவருக்கு உடல் நிலை தேறியுள்ளது.

ஓபன் டாக்
சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய ரோபோ சங்கர், உலக நாயகன் கமல்ஹாசன் -மணிரத்னம் கூட்டணியில் வெளியாக இருக்கும் திரைப்படத்தை பிரமாண்ட விழாவாக நான் எடுத்து நடத்த போகிறேன்.
கமல் ஹாசன் எல்லாம் நம்ப ஊரில் இருக்க வேண்டிய ஆளே இல்லை என்று கூறினார். அப்போது ரோபோ ஷங்கரிடம், கமல் சார் லியோ படத்தில் கொடுத்த வாய்ஸ் ஓவர் வைத்து சிலர் ட்ரோல் செய்தார்கள்.
அதை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி கேட்டனர். இது தொடர்பாக பேசிய ரோபோ, கமல் ஹாசன் என்ன கிழிச்சாருனு கேட்க யாருக்கும் தகுதி இல்லை.
லியோ படத்தின் கிளைமேக்ஸ்காட்சியில் கமல் சாரின் வாய்ஸ் கேட்டவுடன் திரையரங்கம் அதருகிறது அதுக்கு மேல் என்ன சொல்ல என்று ரோபோ ஷங்கர் கூறினார்.

தொழில்களை ஆந்திர மாநிலத்திற்கு தாரை வார்க்கும் தவெக அரசு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம் IBC Tamilnadu
பிரித்தானியாவில் வாழும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி News Lankasri