RRR திரைவிமர்சனம்

RRR ram charan review samuthirakani junior ntr ajay devagan alia butt s.s. rajamouli
1 மாதம் முன்

பாகுபலி இரண்டாம் பாகத்திற்கு பின் மீண்டும் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் ஐந்து ஆண்டுகள் கழித்து வெளியாகியுள்ள திரைப்படம் RRR. ராம் சரண், ஜூனியர் என். டி. ஆர் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அத்தகைய எதிர்பார்ப்பை, RRR திரைப்படம் முழுமையாக திருப்த்தி செய்ததா? இல்லையா? வாங்க பார்க்கலாம்..  

கதைக்களம்

காட்டை சுற்றி பார்க்க வரும் வெள்ளைக்கார துரையும், அவரது மனைவியும், மல்லி எனும் காட்டுவாசி பெண் குழந்தையை தங்களுடன் அழைத்து சென்று விடுகின்றனர். இதனை கேள்விப்படும் பீம் { ஜூனியர் என்.டி. ஆர் }, மல்லியை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வர டெல்லிக்கு, அக்தர் என பெயரை மாற்றிக்கொண்டு செல்கிறார். மற்றொரு புறம் வெள்ளைக்காரர்களை இந்தியாவை விட்டு விரட்டியடிக்கவும், தனது அண்ணனுக்கு கொடுத்த சத்தியத்தை காப்பற்றவும் வெள்ளையர்களிடம் காவல் துறை அதிகரையாக பணிபுரிந்து வருகிறார் ராம் { ராம் சரண் }. 

RRR திரைவிமர்சனம்

டெல்லிக்கு அக்தர் எனும் பெயரில் வரும் பீம் எதிர்ச்சியாக அங்கு ராமனை சந்திக்கிறார். இருவரும் எதிர்பாரா சந்திப்பில் இருந்து, நெருங்கிய நண்பரகளாக மாறுகிறார்கள். அதே சமயம், பீமை பிடித்து வெள்ளையர்களிடம் ஒப்படைக்கும் பொறுப்பில் நியமனம் ஆகும் ராம், தனது நண்பன் அக்தர் தான், பீம் என்று தெரியாமல் ஊரெல்லாம் தேடி அழைக்கிறார். ஒரு கட்டத்தில் இத்தனை நாட்கள் நண்பன் என்று எண்ணிய அக்தர் தான், அந்த பீம் என்று தெரிந்துகொள்ளும் ராம், உடனடியாக பீமை கைது செய்து சிறையில் அடைகிறார்.

நண்பன் ராம், தனக்கு துரோகம் செய்துவிட்டதாக எண்ணி ராமின் மீது கோபம் கொள்கிறார் பீம். ஆனால், பீமின் புரட்சியை பார்க்கும் ராம், தனது அண்ணனுக்கு செய்துகொடுத்து சத்தியத்தையம், லட்சியத்தையும் கைவிட்டு, பீமுக்கு உதவி செய்து, வெள்ளையர்களிடம் கைதியாக மாட்டிக்கொள்கிறார். இறுதியாக, அங்கிருந்து தப்பித்து சென்ற பீம், மீண்டும் ராமனை காப்பற்ற வந்தாரா? இல்லையா? ராமின் லட்சியம் என்னாவது? என்பதே படத்தின் மீதி கதை..

RRR திரைவிமர்சனம்

படத்தை பற்றிய அலசல்

ராம் சரண், ஜூனியர் என். டி. ஆர் இருவருமே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக சண்டை, நடனம் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார்கள். அஜய் தேவ்கன், ஆலியா பட் இருவரும் தங்களுக்கு கொடுத்த வேலையை க்ரெட்டாக செய்துள்ளனர். சமுத்திரக்கனி மற்றும் ஸ்ரேயா படத்தில் வந்ததே யாருக்கும் தெரியவில்லை.

வில்லனாக வரும் Ray Stevenson மற்றும் Alison Doody இருவரின் நடிப்பும் ஓகே. Olivia Morris தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை ஈர்க்கிறார். மற்றபடி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள அனைவரும் அவரவருக்கு கொடுத்த வேலையை அப்படியே செய்துள்ளனர்.

RRR திரைவிமர்சனம்

இயக்குனர் ராஜமௌலிக்கு முதலில் க்ளாப்ஸ். ஏனென்றால், இந்தளவிற்கு VFX காட்சிகளை தத்ருபமாக அமைத்ததற்காக. படத்தில் ஒவ்வொரு காட்சியையும், பார்த்து பார்த்து பிரம்மாண்டமாக செதுக்கியுள்ளார் ராஜமௌலி. ஆனால், இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்திருக்கலாம். ஏனென்றால், திரைக்கதையில் பல இடங்களில் தொய்வு ஏற்படுகிறது. குறிப்பாக இரண்டாம் பாகத்தில்.

கே.வி. விஜயேந்திர பிரசாந்தின் கதையும், சாய் மாதேவின் வசனங்களும் படத்திற்கு பலம். செந்தில் குமாரின் ஒளிப்பதிவுக்கு தனி அப்லாஸ். ஸ்ரீகர் பிரசாந்தின் எடிட்டிங் ஓகே. எம்.எம். கீரவாணியின் இசையும், பின்னணி இசையும் படத்தை தாங்கி நிற்கிறது.

க்ளாப்ஸ்

VFX காட்சிகள்

இயக்கம், கதை, ஒளிப்பதிவு

இசை, பின்னணி இசை

ராம் சரண், ஜூனியர் என்.டி. ஆர் நடிப்பு

பல்ப்ஸ்

இரண்டாம் பாதியில் திரைக்கதை தொய்வு

மொத்தத்தில் எஸ்.எஸ். ராஜமௌலியின் இந்த, R - இரத்தம் R - ரணம் R - ரௌத்திரம் R - ரசிகனை R - ரசிக்கவைத்துள்ளது..

3/5   

மாஸ்டர் பட வசூலை முறியடித்த ராஜமௌலியின் RRR திரைப்படம்- எவ்வளவு வசூல் தெரியுமா?
இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US