டாப் ஹீரோவுடன் இணையும் ருக்மிணி வசந்த்.. முதல் முறையாக கைகோர்க்கும் ஜோடி
ருக்மிணி வசந்த்
கன்னடத்தில் வெளிவந்த Sapta Sagaradaache Ello படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ருக்மிணி வசந்த். இதை தொடர்ந்து கன்னடத்தில் வெளிவந்த பகீரா படமும் வெற்றிபெற்றது.
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த ஏஸ் திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மதராஸி படத்தில் நடித்து வருகிறார்.
ஜூனியர் என்.டி.ஆர் - ருக்மிணி
இந்த நிலையில், ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வரும் ருக்மிணி வசந்தின் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் ரசிகர்களால் அனைவராலும் கொண்டாடப்படும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் படத்தில் கதாநாயகியாக ருக்மிணி வசந்த் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.
ஜூனியர் என்.டி.ஆர் அடுத்ததாக இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில், ஆக்ஷன் கதைக்களத்தில் இப்படத்தை உருவாக்கி வருகிறார்கள். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் என்பதால் இப்படத்தில் ருக்மிணி வசந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கிய நிலையில், வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் ருக்மிணி வசந்த் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கும் என தகவல் தெரிவிக்கின்றனர்.

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
