ரஜினி - கமல் படத்தில் இணையும் சூப்பர்ஹிட் நடிகை.. களைகட்டும் தலைவர் 173
தலைவர் 173
ரஜினிகாந்தின் தலைவர் 173வது திரைப்படத்தை கமல் ஹாசன் தயாரிக்க சுந்தர் சி இயக்குவதாக இருந்தது. ஆனால், திடீரென சுந்தர் சி இப்படத்திலிருந்து விலகிவிட்டார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

அவர் விலகிய நிலையில், அடுத்ததாக யார் அப்படத்தின் இயக்குநராக கமிட்டாகப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் இருந்தது.
பார்க்கிங் படத்திற்காக தேசிய விருது வென்ற இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை இயக்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை. விரைவில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் அப்டேட்
இந்த நிலையில், இப்படத்தில் முன்னணி நடிகை சாய் பல்லவி இப்படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு அமரன் எனும் மாபெரும் வெற்றிப்படத்தை சாய் பல்லவி கொடுத்தார். இதை தொடர்ந்து இவர் கமிட்டாகும் மிகப்பெரிய படமாக இது அமையும் என கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் கதிர் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
