16 வயதினிலே படத்திற்காக ரஜினி, கமல் வாங்கிய சம்பளம் பற்றி தெரியுமா?
16 வயதினிலே
தமிழ் சினிமாவில் 70, 80களில் ரசிகர்களால் மறக்கவே முடியாத அளவிற்கு சில படங்கள் வந்தது, மிகப்பெரிய ஹிட்டும் அடித்துள்ளன.
அப்படிபட்ட ஒரு படம் தான் 16 வயதினிலே, பாரதிராஜா இயக்க கமல்ஹாசன், ரஜினி, ஸ்ரீதேவி முக்கிய வேடத்தில் நடிக்க 1977ம் ஆண்டு வெளியாகி இருந்தது.
இந்த படத்தில் சப்பானி வேடத்தில் நடித்து எல்லோர் கவனத்தையும் பெற்றிருந்தார் கமல்ஹாசன்.
நடிகர்களின் சம்பளம்
இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு ரூ. 27 ஆயிரம், ஆனால் ரஜினி ரூ. 5000 ஆயிரம் கேட்டிருக்கிறார். மூன்றாயிரம் ரூபாய் பேசி, 2.500 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள்.
அதிலும் ரூ.500 பாக்கி இருக்கிறது, கமலுக்கும்-ஸ்ரீதேவிக்கும் இளநீர் கொடுப்பார்கள், ரஜினிக்கு அது கூட தந்ததில்லை என பாரதிராஜா 2013ம் ஆண்டு இப்பட ரீ-ரிலீஸ் டிரைலர் வெளியீட்டின் போது கூறியுள்ளார்.
10 பெட்ரூம் மேல் வைத்து நடிகர் விஜயகுமார் கட்டியுள்ள சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- கலக்கல் வீடு இதோ