Myositis என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நடிகை சமந்தா! தற்போதைய நிலை குறித்து அவர் வெளியிட்ட பதிவு
சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா.
இவர் நடிப்பில் யசோதா, சகுந்தலம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் யசோதா திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் திடீரென நடிகை சமந்தா அவரின் சமூக வலைதள பக்கங்களில் தனக்கு ஏற்பட்டுள்ள நோய் குறித்து பதிவிட்டு இருக்கிறார்.
அதன்படி தனக்கு Myositis என்னும் Autoimmune நோய் பாதிப்பு இருப்பதாகவும், இதில் இருந்து குணமடைய கொஞ்ச காலம் எடுத்து கொள்வதாகவும், ஆனால் விரைவில் நலமுடன் திரும்புவேன் என பதிவிட்டு இருக்கிறார்.
மேலும் யசோதா படத்திற்கு ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டே டப்பிங் செய்யும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார் சமந்தா.
— Samantha (@Samanthaprabhu2) October 29, 2022
அஜித் பெயருக்கு முன் தன் பெயரை போட சொன்ன விஜய்.. உண்மையை உடைத்த நபர்