மகன் பிறந்த நேரம் சஞ்சீவ்-ஆல்யா மானசாவிற்கு கிடைத்த சூப்பர் பரிசு- அவர்களே வெளியிட்ட வீடியோ
நடிகை ஆல்யா மானசா கடந்த சில வருடங்களுக்கு முன் யார் என்றே பாதி மக்களுக்கு தெரியாது, ஆனால் இப்போது அப்படி இல்லை.
தமிழ் சினிமாவின் முக்கிய அதாவது பிரபலமான சீரியல் நடிகை என்றாலே முதலில் இவர் முகம் மக்களுக்கு நியாபகம் வந்துவிடும், அந்த அளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார்.
ராஜா ராணிக்கு பின்
விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி தொடர் நடித்த இவருக்கு அதன்பிறகு வாழ்க்கையே மாறிவிட்டது. அதில் நடித்த சஞ்சீவ் என்ற நடிகரையே காதலித்து திருமணம் செய்து இப்போது 2 குழந்தைகளை பெற்றுவிட்டார்.
கடந்த மார்ச் 27ம் தேதி தங்களுக்கு மகன் பிறந்துள்ளான் என சஞ்சீவ் புகைப்படத்துடன் அறிவித்தார்.
குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆல்யா இப்போது தான் நடித்துவந்த ராஜா ராணி 2 தொடரில் இருந்து சுத்தமாக வெளியேறிவிட்டார்.

ஸ்பெஷல் வீடியோ
சஞ்சீவ்-ஆல்யா மானசா இருவரும் யூடியூப் பக்கம் வைத்திருப்பது நாம் அறிந்தது தான். தற்போது அவர்களின் யூடியூப் பக்கத்தில் நிறைய சப்ஸ்கிரைபர்களும், பார்வையாளர்களும் அதிகமாகியுள்ளதால் அவர்களுக்கு கோல்ட் ஷீல்ட் பரிசாக கிடைத்துள்ளது.
மகன் பிறந்த கையோடு அவர்களுக்கு இந்த ஷீல்ட் கிடைத்திருப்பது பெறும் மகிழ்ச்சி. அதனை பரிசை ரசிகர்களுக்கு காட்டி சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
கர்நாடகாவில் காத்து வாக்குல ரெண்டு காதல் பட வசூல் இவ்வளவா?