மகள் ஐலாவுக்கு தெரியாமல் மகனை கொஞ்சும் சீரியல் நடிகர் சஞ்சீவ்- ஆல்யா மானசா செய்த வேலை

By Yathrika Apr 23, 2022 08:20 AM GMT
Report

சீரியல் நடிக்க வரும்போது யாரென்று தெரியாமல் வந்து பின் தொடர் முடிவதற்குள் ஜோடியான பிரபலங்களில் சஞ்சீவ்-ஆல்யா மானசா உள்ளார்கள்.

விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி தொடர் நடிக்கும் போது புதிதாக பழக ஆரம்பித்த இவர்கள் தொடர் செல்ல செல்ல காதலர்களாக மாறினார்கள்.

ஆனால் இவர்களது காதலுக்கு ஆல்யா மானசா வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்க இருவரும் திடீரென திருமணம் செய்துகொண்டார்கள்.

இவர்களுக்கு 2020ம் ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தார், அவருக்கு ஐலா என்று பெயர் வைத்துள்ளனர். அண்மையில் இருவருக்கும் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தைக்கு அர்ஷ் என்றும் பெயர் வைத்துவிட்டனர்.

மகள் ஐலாவுக்கு தெரியாமல் மகனை கொஞ்சும் சீரியல் நடிகர் சஞ்சீவ்- ஆல்யா மானசா செய்த வேலை | Sanjeev Cute Bonding With His Son

மகனுடன் சஞ்சீவ்

சஞ்சீவ்-ஆல்யா இருவரும் ஒரு யூடியூப் பக்கம் வைத்துள்ளனர். அதில் எல்லா விஷயங்கள் குறித்தும் வீடியோ வெளியிட்ட வண்ணம் உள்ளனர். அப்படி அண்மையில் சஞ்சீவ் தனது மகனை கொஞ்சும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

சஞ்சீவ் கொஞ்சும் போது ஆல்யா மகனுக்கு உங்களது தாடி குத்த போகிறது பாப்பு என கூறுகிறார். சஞ்சீவ் கதவை மூடு ஐலா பார்த்துவிட போகிறாள், அப்புறம் பொசசீவ் ஆவாள் என்கிறார்.

மகள் ஐலாவுக்கு தெரியாமல் மகனை கொஞ்சும் சீரியல் நடிகர் சஞ்சீவ்- ஆல்யா மானசா செய்த வேலை | Sanjeev Cute Bonding With His Son

மகனை அப்பா கொஞ்சுவது எல்லோரும் செய்யும் விஷயம் என்றாலும் பிரபலங்கள் வீடியோவாக வெளியிடுவதை ரசிகர்கள் ரசித்து தான் வருகிறார்கள்.

ரூ. 200 கோடி வசூல் சாதனை செய்த விஜய்யின் டாப் 5 படங்கள்- விவரம் இதோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US