நீ செத்த பிறகு வரும்..பிரபலத்தை விளாசும் இயக்குனர் சீனு ராமசாமி
சீனு ராமசாமி
தர்மதுரை, தென்மேற்கு பருவக்காற்று, மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தான் சீனு ராமசாமி.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி, இயக்குனர் சீனு ராமசாமி இயக்கும் படங்கள் சிறந்த படங்கள் என சொல்வதில் சிலருக்கு உடன்பாடு இல்லை. சீனு ராமசாமியின் படங்களுக்கு நல்ல விமர்சனம் வந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி கிடைக்காது.
ஆனால் சீனு ராமசாமி படத்தின் ரிசல்ட் தெரிந்த பிறகு அந்த படம் சில இடங்களில் விருது வாங்கியதாக செய்தி அனுப்புவார். மேலும் அவரது சோசியல் மீடியா பக்கத்திலும் ஷேர் செய்து கொண்டே இருப்பார்.
இதற்கு என்னுடைய நண்பர் ஒரு , இவர் செத்த பிணத்திற்கு மேக்கப் போட்டு இருக்கிறார் என்று என்னிடம் கூறினார். அந்த விஷயம் எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது என்று பிஸ்மி கூறினார்.
பதிலடி
இவரின் இந்த பேச்சிக்கு சீனு ராமசாமி, தியேட்டரில் வசூல் குறைவு தான் பிஸ்மி ஆனால் மாமனிதன் ஆகா ஓடிடியில் வெற்றி செத்த பொணத்தை எதுக்குப்பா மாஸ்க்கோ 45 வது திரைப்பட விழாவில் உலக நாடுகல்ல திரையிடுறாங்க.
நா பதிவிடுவது உனக்கோ உசிரு இல்லைன்னு சொன்ன ஆளுக்கோ இல்லடா நீ செத்த பிறகு வரும் என் இளைய தலைமுறைக்கு அதுசரி ஒரு கோடி வருமானம் காட்டி income tax கட்டிட்டேயேபா கெட்டிக்காரன் தான் என்று பதிவிட்டுள்ளார்.
இதோ பாருங்க
தியேட்டரில் வசூல் குறைவு தான் பிஸ்மி
— Seenu Ramasamy (@seenuramasamy) November 6, 2023
ஆனால் மாமனிதன் ஆகா ஓடிடியில் வெற்றி
செத்த பொணத்தை எதுக்குப்பா மாஸ்க்கோ 45 வது திரைப்பட விழாவில் உலக நாடுகல்ல
திரையி டுறாங்க
நா பதிவிடுவது உனக்கோ உசிரு இல்லைன்னு சொன்ன ஆளுக்கோ இல்லடா
நீ செத்த பிறகு வரும் என் இளைய தலைமுறைக்கு
அதுசரி ஒரு…

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
