சீரியல் பிரபலங்கள் ஆல்யா மானசா-சஞ்சீவ் வீட்டில் விசேஷம், தொடங்கப்பட்ட ஏற்பாடுகள்- விஷயம் என்ன தெரியுமா?
சஞ்சீவ்-ஆல்யா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
அந்த தொடர் மூலம் தங்களது தொழில் மற்றும் சொந்த வாழ்க்கையில் ஜெயித்து வருபவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா. பிரபலமான சின்னத்திரை பிரபலங்களில் இந்த ஜோடிகள் தான் டாப்பில் உள்ளார்கள்.
தற்போது சஞ்சீவ் சன் டிவியில் கயல் தொடர் நடிக்க, ஆல்யா மானசா இதே தொலைக்காட்சியில் இனியா என்ற தொடர் நடித்து வருகிறார். இதுதவிர நிறைய தனியார் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார்கள்.
புதிய தகவல்
இந்த நிலையில் சீரியல் நடிகை ஆல்யா மானசா ஒரு சந்தோஷ செய்தியை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
அதாவது ஆல்யா மற்றும் சஞ்சீவ் இருவரும் சென்னையில் ஒரு வீடு கட்டிக்கொண்டு வருகிறார்கள் என்பது நமக்கு தெரியும். தற்போது வீட்டின் வேலைகள் முடிவடைந்து கிரஹப்பிரவேசம் நடக்க இருக்கிறதாம்.
வீட்டை சுத்தம் செய்யும் வேலைகள் இப்போது நடந்து வருவதாக ஒரு கியூட் போட்டோவுடன் ஆல்யா மானசா ஒரு பதிவு போட்டுள்ளார்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
