பீஸ்ட் படத்துடன் மோதும் நடிகர், விஜய்யின் தீவிர ரசிகராம் ! அவரே சொன்ன விஷயம்..
பீஸ்ட் VS கே.ஜி.எப்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.
ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள பீஸ்ட் படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் பீஸ்ட் வெளியாகும் அடுத்த நாளே KGF படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது, பீஸ்ட் படத்திற்கு நிகரான எதிர்பார்ப்பு KGF படத்திற்கும் இந்தியளவில் இருக்கிறது.

விஜய்யின் தீவிர ரசிகர்
இதனிடையே பீஸ்ட், KGF படங்களுடன் பாலிவுட் நடிகர் ஷைத் கபூரின் ஜெர்சி திரைப்படமும் வெளியாக இருக்கிறது. மேலும் ஷைத் கபூர் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் குறித்து பேசியுள்ளார்.
அதில் "நான் ஒரு மிக பெரிய விஜய் ரசிகன், எனக்கு அவருடைய படங்கள் எல்லாம் பிடிக்கும். அவர் ஒரு சிறந்த நடன கலைஞர், எனக்கு எப்போதும் நன்றாக நடனம் அடுபவர்களை பிடிக்கும்.
பீஸ்ட் ஒரு அற்புதமான படமாக இருக்கும் என நம்புகிறேன், ஆனால் அப்படம் வித்தியாசமான மார்க்கெட்டுக்கு ஏற்றது என நினைக்கிறன்" என கூறியுள்ளார்.
