தேவர் மகன் படத்தில் கமல், சிவாஜியுடன் நடித்துள்ள ஸ்ருதி ஹாசன்.. பலரும் பார்த்திராத புகைப்படம்
தேவர் மகன்
தமிழ் சினிமாவில் வெளிவந்த தலைசிறந்த படைப்புகளில் ஒன்று தேவர் மகன். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை கமல் ஹாசன் எழுதியிருந்தார்.
பரதன் இப்படத்தை இயக்க கமலுடன் இணைந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இப்படத்தில் நடித்திருந்தார். மேலும் நாசர், காகா ராதாகிருஷ்ணன், ரேவதி, கௌதமி ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
ஸ்ருதி ஹாசன்
இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் என்பதை நாம் அறிவோம். ஆனால், கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசனும் இப்படத்தில் நடித்திருந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா.
ஆம், ஸ்ருதி ஹாசன் குழந்தை நட்சத்திரமாக இப்படத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் எடுத்து புகைப்படத்தில், பிங்க் நிற உடையில் உள்ளவர்தான் ஸ்ருதி ஹாசன். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..