பெற்றோர்களை 20 நிமிடம் துன்புறுத்தினார்கள் ..CRPF மீது குற்றம் சாட்டிய நடிகர் சித்தார்த்
நடிகர் சித்தார்த்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் சித்தார்த். இவர் நடிப்பில் வெளிவந்த பாய்ஸ், ஆயுத எழுத்து என அடுத்தடுத்த முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றி பிரபலமடைந்தார்.
தற்போது குறைந்த அளவு படங்களில் மட்டும் நடித்து வரும் இவர் சினிமா மட்டுமின்றி அரசியல் கருத்துக்களையும் தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.
துன்புறுத்தினார்கள்
இந்நிலையில் மதுரையில் உள்ள விமான நிலைய பாதுகாப்புப் பணியாளர்கள் மீது குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார் சித்தார்த். அதில், "CRPF அதிகாரிகள் 20 நிமிடத்திற்கு எனது மூத்த பெற்றோர்களை துன்புறுத்தினார்கள். மேலும் நாங்கள் வைத்திருந்த பைகளில் இருந்து நாணயங்களை அகற்றச் செய்தார்கள்.”
”அதிகாரிகள் பலமுறை எங்களிடம் ஹிந்தியில் பேசிக்கொண்டு இருந்தனர், அவர்கள் ஆங்கிலத்தில் பேச மறுத்துவிட்டனர். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, பாதுகாப்புப் பணியாளர்கள், 'இந்தியாவில் இப்படித்தான் இருக்கும்' என்று பதிலளித்தனர்". இவ்வாறு சித்தார்த் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
பிரபல காமெடி நடிகர் சார்லியின் மகனை பார்த்துள்ளீர்களா?- அழகிய திருமண புகைப்படம்

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
