புதுப் பையன் இல்லை.. கமலுக்கு சிம்பு கொடுத்த அதிரடி பதில்
கமல்ஹாசன்
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும், உலக நாயகன் என்று அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் வரும் ஜூன் 5 - ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இப்படத்தில் கமல் உடன் இணைந்து சிம்பு நடித்துள்ளார். முதல் முறையாக இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் இப்படத்தில் த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் என பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
அதிரடி ரிப்ளை
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கமல்ஹாசன் சிம்பு குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், "சென்ற தலைமுறையைப் போலவே இந்த தலைமுறை நடிகர்களும் வளர்ந்து வருகின்றனர்.
சிம்பு செட்டுக்கு வரும் போது நீ ஒரு லெஜெண்டிடம் இணைந்து நடிக்க போகிறாய் என அனைவரும் கூறுவர். நான் அவரிடம் சென்று இது குறித்து பயப்படாதே என்றேன். அதற்கு சிம்பு, நானும் புதுப் பையன் என நீங்களும் நினைத்து விடாதீர்கள் சார் என கூறினார்" என்று தெரிவித்துள்ளார்.

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu
