தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா
தக் லைஃப்
இயக்குநர் மணி ரத்னம் இயக்கிய தக் லைஃப் திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளிவந்தது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யாத காரணத்தினால் மோசமான விமர்சனங்களை சந்தித்துள்ளது.
ஆனாலும் கூட முதல் நாளில் உலகளவில் ரூ. 46 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இப்படத்தில் கமலுக்கு நிகரான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்திருந்தார். இவர்கள் இருவரின் நடிப்பும் படத்திற்கு பலமாக அமைந்தது.
முதலில் நடிக்கவிருந்த நடிகர்
ஆனால், முதன் முதலில் சிம்புவின் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது நடிகர் ரவி மோகன் தான். ஆம், முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ரவி மோகனைதான் கமிட் செய்துள்ளனர்.
அப்போது அந்த கதாபாத்திரம் நீட்டிக்கப்பட்ட கேமியோ ரோலாகதான் இருந்துள்ளது. ஆனால், அவர் திடீரென படத்திலிருந்து வெளியேற அவருக்கு பதிலாக சிம்பு நடிக்க வந்துள்ளார். அவர் வந்தபின் கமல் ரோலுக்கு நிகரான கதாபாத்திரமாக வளர்ந்துள்ளது என கூறப்படுகிறது.