'பாடகி தீ இன்னும் 15 ஆண்டுகளில் 100 சின்மயி, ஷ்ரேயா கோஷல்களை விழுங்கலாம்'.. பாடகி சின்மயி புகழாரம்
தக் லைஃப்
வருகிற ஜூன் 5ம் தேதி ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் தக் லைஃப் திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தை இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
மேலும் த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர் .ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
தக் லைஃப் ஆல்பமில் மொத்தம் 9 பாடல்கள் இடம்பிடித்த நிலையில், இதில் பின்னணி பாடகி தீ பாடிய பாடல்தான் முத்த மழை. ஆனால், இசை வெளியீட்டு விழாவில் தீ வராத காரணத்தினால், அவருக்கு பதிலாக அந்த பாடலை சின்மயி பாடினார். உடனடியாக அவர் பாடியது ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
எங்களுக்கு சின்மயி வெர்ஷன் தனியாக வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி, இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய வெர்ஷன் வெளிவந்தது. கடந்த மூன்று நாட்களாக டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தில் Youtubeல் உள்ளது.
சின்மயி
இந்த நிலையில், முத்து மழை பாடலுக்காக தனக்கு கிடைத்த வரவேற்பு குறித்தும், பாடகி தீ குறித்தும் சின்மயி பேசியுள்ளார்.
இதில் "தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் முத்த மழை பாடலை தீதான் பாடியிருப்பார். அன்று அவர் ஊரில் இல்லை. அதனால், நான் பாடினேன். எனக்கு கிடைத்த வரவேற்பை நம்பவே முடியவில்லை. ஆச்சரியமாக இருக்கிறது. இளம் திறமையாளரான தீ இன்னும் 15 ஆண்டுகளில் 100 சின்மயி, ஷ்ரேயா கோஷல்களை விழுங்கலாம்" என கூறியுள்ளார்.