மன்னராக வாழ்ந்த "நடிகர் திலகம்" பற்றி யாரும் அறியாதது - இதோ
நடிகர் திலகம்
தமிழ் சினிமாவில் "நடிகர் திலகம்" என மக்களால் அழைக்கப்படுபவர் "சிவாஜி கணேசன்". இவர் முதன் முதலில் மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கினார். அதன் பின் "பராசக்தி" திரைப்படத்தின் மூலம் தன்னை ஒரு நடிப்பு சக்ரவர்த்தியாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் கிட்டத்தட்ட 288 படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழில் சுமார் 250 படங்களில் நடித்து சிறந்த நடிகராக தடம் பதித்தார். சிவாஜி கணேசன் 40 ஆண்டுகளாக சுமார் பல 100 கோடி ரூபாய்க்கு மேல் தான தர்மம் செய்துள்ளார். இவர் நிஜ வாழ்க்கையில் "மன்னனாக" தான் வாழ்ந்தார் என சிவாஜி செய்த தான தர்மத்தை ஒருவர் ஆய்வு செய்து அமல்படுத்தியுள்ளார்.
சிவாஜி செய்த தான தர்மம்
அதில், சிவாஜி 40 வருடங்களில் ரூபாய் 310 கோடி தான தர்மம் செய்துள்ளாராம். அது இல்லாமல் இலங்கையில் மக்களுக்கு மருத்துவமனை கட்டிக் கொடுத்துள்ளார். சிவாஜி, காமராஜர் தொடங்கிய சத்துணவு திட்டத்தை, ஜவஹர்லால் நேரு அறிமுகப்படுத்திய போது அதற்கு 1 லட்சம் ரூபாய் நன்கொடையாக கொடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் நடைபெற்ற போர் சமயத்தில் தன்னிடம் இருந்த 100 பவுன் எடையுடைய பேனாவை நன்கொடையாக கொடுத்திருக்கிறார். அத்துடன் அவர் அணிந்திருந்த 450 பவுன் நகையை கழட்டி கொடுத்துள்ளார்.
சிவாஜி தனது கடைசி காலத்தில் யானைகளை தான தர்மமாக கொடுத்தார். அவரிடம் யானை பாகன் ஒருவன் தனக்கும், யானைக்கும் சாப்பிட உணவு இல்லை என கேட்டபோது, 2 ஏக்கர் நிலத்தை வாங்கி பட்ட போட்டு யானை பாகனுக்கு கொடுத்துள்ளார். அதில் விவசாயம் செய்து நீயும் சாப்பிடு யானைக்கும் சாப்பாடு கொடு என கூறி இருக்கிறார்.
சிவாஜி கணேசன் தர்மத்தில் "மன்னனாக" வாழ்ந்துள்ளார். இவர் தனது வாழ்வில் செய்த தர்மங்களை பற்றி ஒரு போதும் வெளியப்படுத்தியதில்லை. இவர் எம்.ஜி.ஆர் க்கு இணையாக தர்மங்களும் செய்துள்ளார். ஆனால் அது மக்களுக்கு தெரியவில்லை. தனது வாழ்க்கை முழுவதும் கர்ணனாக வாழ்ந்தவர் சிவாஜி கணேசன்.
இடையில் படு ஒல்லியாக காணப்பட்ட நடிகர் சந்தானமா இது?- லேட்டஸ்ட் சூப்பரான லுக்

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
