உடல்நிலை சரியில்லாமல் போனதால் கமல் பட வாய்ப்பை தவறவிட்ட சிவாஜி.. அதுவும் இந்த படமா
சிவாஜி கணேசன்
தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என அனைவராலும் அழைக்கப்படுபவர் சிவாஜி கணேசன். இவர் கமலுடன் இணைந்து தேவர் மகன் படத்தில் நடித்திருந்தார்.
இப்படத்திற்கு பின் இவர் மீண்டும் கமலுடன் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஆம், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகவிருந்த படத்தில் சிவாஜி கணேசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார்.
ஆனால், அப்போது அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்த காரணத்தினால் இப்படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது.
இந்த படமா
ஆனால், தான் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் நடிகர் ஜெமினி கணேசன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கமல் ஹாசனிடம் கூறியுள்ளார். அதன்பின் சிவாஜி கூறியது போலவே ஜெமினி கணேசனை நடிக்க வைத்தார் கமல்.
படமும் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்தது. அந்த படம் தான் அவ்வை சண்முகி. விஸ்வநாதன் கதாபாத்திரத்தில் தான் சிவாஜி கணேசன் நடிக்கவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தீனா படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானா.. யார் தெரியுமா

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
