சிவகார்த்திகேயனின் 25வது படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.. இதோ
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் சிவகார்த்திகேயன். குறிப்பாக அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், சிவகார்த்திகேயனின் அந்தஸ்து உயர்ந்துள்ளது.
திரையுலக மார்க்கெட், சம்பளம் என தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் நடிப்பில் உருவாகவுள்ள 25வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ளார். சூர்யா - சுதா கொங்கரா கூட்டணியில் புறநானூறு எனும் படம் உருவாகவிருந்தது. ஆனால் திடீரென சூர்யா இந்த படத்திலிருந்து விலகிவிட்டார். அந்த கதையை சிவகார்த்திகேயன் ஓகே செய்து நடிக்கவுள்ளார்.
ஆனால், அந்த தலைப்பு இப்படத்திற்கு இருக்காது என கூறுகின்றனர். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஜெயம் ரவி முதல் முறையாக நடிக்கவுள்ளார். மேலும் நடன சென்சேஷனல் ஸ்ரீலீலா மற்றும் நடிகர் அதர்வா இப்படத்தில் நடிக்கிறார்களாம்.
படத்தின் பட்ஜெட்
இந்த நிலையில், பிரம்மாண்டமாக உருவாகவுள்ள சிவகார்த்திகேயன் 25வது படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 140 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
