100 கோடியை நெருங்கும் மாவீரன் வசூல்.. சாதனை படைப்பாரா சிவகார்த்திகேயன்

Report

மாவீரன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 14ஆம் தேதி வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றிபெற்றுள்ள திரைப்படம் மாவீரன். மண்டேலா படத்தை இயக்கி வெற்றியை ருசித்த இயக்குனர் மடோன் அஸ்வின் தான் இப்படத்தை இயக்கியிருந்தார்.

100 கோடியை நெருங்கும் மாவீரன் வசூல்.. சாதனை படைப்பாரா சிவகார்த்திகேயன் | Sivakarthikeyan Maaveeran Going To Collect 100 Cr

இப்படமும் அவருக்கு தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத வெற்றியை தேடி கொடுத்துள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி ஷங்கர் நடித்திருந்தார். இப்படத்தில் சிவா மற்றும் அதிதி இருவரும் இணைந்து பாடிய பாடல் கூட மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

மேலும் சிவாவின் அம்மாவாக நடித்த சரிதா, வில்லனாக வரும் மிஸ்கின் என அனைவரையும் இப்படத்தில் பட்டையை கிளப்பிவிட்டனர்.

வசூல்

இந்நிலையில், பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் மாவீரன் திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 69 கோடி வரை வசூல் செய்துள்ளது. மேலும் தமிழகத்தில் மட்டுமே ரூ. 40 கோடி வரை வசூல் செய்துள்ளது.

100 கோடியை நெருங்கும் மாவீரன் வசூல்.. சாதனை படைப்பாரா சிவகார்த்திகேயன் | Sivakarthikeyan Maaveeran Going To Collect 100 Cr

இதை வைத்து பார்க்கும் போது மாவீரன் விரைவில் ரூ. 100 கோடியை எட்டும் என கூறப்படுகிறது. ஆனால், உண்மையாகவே இப்படம் ரூ. 80 முதல் ரூ. 90 கோடி வரை தான் வசூல் செய்ய வாய்ப்பு என திரை வட்டாரங்கள் கூறுகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று.

இந்த புகைப்படத்தில் இருக்கும் எவர்கிரீன் நடிகை யார் என்று தெரிகிறதா?..கண்டுபிடிங்க பாக்கலாம்! 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US