சிவகார்த்திகேயனின் பராசக்தி பட அதிரடி தகவல்.. ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்!
பராசக்தி
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பராசக்தி. இப்படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடித்து வருகிறார். மேலும் அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் பேசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளிவர உள்ளது.
ஹேப்பி நியூஸ்!
இந்நிலையில், இப்படம் குறித்து ஒரு அதிரடி தகவல் கிடைத்துள்ளது.
அதாவது, தற்போது பராசக்தி படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, மதுரை, இலங்கை, பொள்ளாச்சியைத் தொடர்ந்து இறுதியாக சென்னையில் நடைபெற்று வருகிறது.
இன்னும் சில நாள்களில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என்று கூறப்படுவதால் ‘பராசக்தி’ திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு வெளிவரும் என்று சொல்லப்படுகிறது.