பராசக்தி படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா.. வெளிவந்த வீடியோ இதோ..
பராசக்தி
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் பராசக்தி. இப்படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்த நிலையில், புறநானூறு என தலைப்பு வைக்கப்பட்டு இருந்தது.
அவர் வெளியேறிய நிலையில், இப்பட வாய்ப்பு சிவகார்த்திகேயனுக்கு சென்றது. அதன்பின் தலைப்பும் பராசக்தி என மாற்றப்பட்டுள்ளது. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடிக்க, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் முக்கிய காதிபத்திரங்களில் நடிக்கிறார்கள்.
வெளிவந்த வீடியோ
இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. விறுவிறுப்பாக பராசக்தி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பில் இருந்து ரசிகர் ஒருவர் எடுத்த வீடியோ எடுத்தார்.
இந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீலீலா இருவரும் இருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோ பார்க்க இந்த லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்.