ரயில் நிலையத்தில் படுத்திருந்த பிரபல நடிகர்! கோடிக்கணக்கில் இருந்தும் இவ்ளோ எளிமையா
சோனு சூட் ரயில் நிலையத்தில் படுத்திருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
சோனு சூட்
வில்லன் நடிகர் சோனு சூட் தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலம் ஆனவர். அருந்ததி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
சோனு சூட் கொரோனா லாஃடவுன் காலகட்டத்தில் கஷ்டப்பட்டவர்கள் பலருக்கும் மிகப்பெரிய அளவில் உதவிகள் செய்தார். அதற்காக அவருக்கு மிகப்பெரிய பாராட்டும் கிடைத்தது.
தற்போதும் அவரது வீடு தேடி உதவி கேட்க பலரும் செல்கிறார்கள். அவரும் தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறார்.

லோக்கல் ரயில் பயணம்
சோனு சூட் மற்ற நடிகர்கள் போல ஓவர் பந்தா செய்வதில்லை. தற்போது அவர் கூலாக ரயில் நிலையத்தில் படுத்திருந்து அதன் பின் லோக்கல் ரயில் ஏறி வீட்டுக்கு சென்று இருக்கிறார். ரயில் நிலைய குழாயில் தண்ணீர் குடித்த அவர் ரயிலில் ஏறி சென்ற போது அவருடன் போட்டோ எடுக்க பலரும் வந்திருக்கிறார்கள்.
அவர்களுடன் பொறுமையாக அவர் செல்பி எடுத்துக்கொண்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
I was trained to travel in a train ? pic.twitter.com/fkj46CWvkt
— sonu sood (@SonuSood) October 4, 2022
இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் திருமணம் முடிந்தது! ஜோடியின் போட்டோ இதோ