ஸ்ரீதேவி விஜயகுமாரின் மகளா இது! எப்படி வளர்ந்து விட்டார் பாருங்க, புகைப்படம் இதோ
ஸ்ரீதேவி விஜயகுமார்
நடிகர் விஜயகுமாரின் மகளான ஸ்ரீதேவி விஜயகுமார் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் தெலுங்கு சினிமா மூலம் கதாநாயகியாக களமிறங்கினார். ஹீரோயினாக முதல் படத்திலேயே பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
மேலும் தமிழில் தனுஷுடன் காதல் கொண்டேன், ஜீவாவுடன் தித்திக்குதே என அழகிய படங்களை கொடுத்தார். 2009ம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ராகுல் - ஸ்ரீதேவி தம்பதிக்கு ரூபிகா என்கிற மகள் இருக்கிறார்.
திருமணத்திற்கு பின் பெரிதும் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீதேவியின் மகள்
இந்த நிலையில், ஸ்ரீதேவி விஜயகுமாரின் மகள் ரூபாவிற்கு கடந்த 13ம் தேதி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட அழகிய குடும்ப புகைப்படங்களை ஸ்ரீதேவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், அட நம்ம ஸ்ரீதேவி விஜயகுமாரின் மகளா இது, நன்றாக வளர்ந்து விட்டாரே என கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..



