'இயக்குனர்களை நான் குறை சொல்ல மாட்டேன்' - முக்கிய விஷயத்தை குறித்து நடிகை ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்
நடிகை ஸ்ருதிஹாசன்
கடந்த வருடம் தெலுங்கில் வெளிவந்த நடித்த கிராக் படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து சண்டைக்காட்சிகளில் மிரட்டியிருந்தார் நடிகை ஸ்ருதிஹாசன்.
அதனை தொடர்ந்து, தற்போது பிரசாந்த் நீல் டைரக்ஷனில் பிரபாஸுடன் சலார் படத்தில் இணைந்து நடித்து வரும் ஸ்ருதி ஹாசனுக்கு இப்படத்திலும் ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறதாம்.

சண்டை பயிற்சி
இந்த சண்டை காட்சிகளுக்காக 'Martial arts' கலையை ஸ்ருதி ஹாசன் கற்றுக்கொண்டு வருகிறாராம். இதுகுறித்து சமீபத்தில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது " பெண்களுக்கு சினிமாவில் ஆக்ஷன் காட்சிகள் ரொம்பவே குறைவு தான். இதற்காக இயக்குனர்களை நான் குறை சொல்ல மாட்டேன்.
மேலும் " அதேசமயம் மற்ற யாரையும் விட உதைப்பதில் வல்லவர்கள் பெண்கள் தான். பெண் உதைப்பதை பார்க்கவே அழகாக இருக்கும் " என்று கூறியுள்ளார்.

இறந்தவர் திரும்பி வந்ததால் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் எதிர்பார்க்காத திருப்பம்