இந்த புகைப்படத்தில் உள்ள நடிகர் யார் என்று தெரிகிறதா? பிளாக்பஸ்டர் படத்தில் நடித்தவர்
சுப்ரமணியபுரம்
திரையுலகில் ஒரே திரைப்படத்தில் நடித்து உலகம் முழுக்க பிரபலமானவர்களும் உள்ளனர். அதே சமயம், ஒரு சூப்பர்ஹிட் திரைப்படத்தில் நடித்திருந்தாலும் கூட அந்த படத்திற்கு பின் இவர் என்ன ஆனார் என்பது கூட தெரியாமல் ஆகியிருக்கிறது.

அப்படி தமிழ் சினிமாவில் பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த ஒரு திரைப்படத்தில் நடித்த ஒரு நடிகரின் சமீபத்திய வீடியோ வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. சசிகுமார் இயக்கி, ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் சுப்ரமணியபுரம்.

டும்கான்
இப்படத்தில் சசிகுமாருடன் இணைந்து ஜெய், சமுத்திரக்கனி, ஸ்வாதி, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்திருந்தனர். இதில் சசிகுமாரின் கூட்டாளிகளில் ஒருவராக 'டும்கான்' என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் நடிகர் மாரி. இவருடைய கதாபாத்திரம் இப்படத்தில் மிகவும் வலுவான ஒன்றாக இருந்தது.

சுப்ரமணியபுரம் படத்தில் அனைவராலும் ரசிக்கப்பட்ட 'டும்கான்' கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் மாரியின் சமீபத்திய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும், 'சுப்ரமணியபுரம் படத்தில் பார்த்த அந்த நபரா இவர்' என தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். இதோ அந்த வீடியோ:
இவரு ஒரு சூப்பர் ஹிட் தமிழ் படத்துல வந்த ஒரு நடிகர், யாருனு கண்டுபிடிங்க பாப்போம்?? pic.twitter.com/woUml51gF8
— BAKWAS FELLOW (@bakwasfellow) May 18, 2026
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri