விக்ரம் பட கதையை சொன்னவுடன் நடிகர் சூர்யா கொடுத்த ரியாக்ஷன் !
விக்ரம் கதை கேட்ட சூர்யா
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் விக்ரம்.
கமலுடன் இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளதால், இப்படத்தை காண கோலிவுட் திரையுலகமே எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா நடிப்பதை உறுதி செய்திருந்தார் லோகேஷ் கனகராஜ். மேலும் கமல் அளித்த சமீபத்திய பேட்டியிலும் சூர்யா படத்தின் கடைசி நிமிட முக்கிய காட்சியில் நடித்திருப்பதாக கூறியிருந்தார்.
இதற்கிடையே தற்போது லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் பேட்டியில் விக்ரம் படத்தில் சூர்யா இணைந்தது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது : "நான் அவரிடம் கதையை சொன்னதுமே, அந்த கதாபாத்திரம் பிடித்ததால் உடனடியாக நடிக்க சம்மதித்தார் சூர்யா சார்.
முடிந்தளவு அந்த கதாபாத்திரத்தை மறைமுகமாக வைத்திருந்தோம். ஆனால் மொபைலில் வீடியோ எடுத்து வெளியிட்டு விட்டார்கள்" என லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார்.
இந்த குக் வித் கோமாளி 3 பிரபலங்கள் திருமணம் செய்யப்போகிறார்களா?

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
