முதல்முறையாக Rolex கெட்டப்-ல் நடிகர் சூர்யாவே வெளியிட்ட பதிவு! குவியும் லைக்ஸ்..
Rolex Sir
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தொடர்ந்து அடுத்தடுத்து பல முக்கிய இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார். மேலும் தற்போது இவர் இயக்குநர் பாலா இயக்கத்தில் அவரின் சூர்யா 41 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அப்படத்தை தொடர்ந்து சூர்யா சுதா கொங்கரா, வெற்றிமாறன், ரவிக்குமார் என பல முக்கிய இயக்குநர்களின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
இதனிடையே சூர்யா ரசிகர்களே எதிர்பார்க்காத வகையில் விக்ரம் திரைப்படத்தில் முரட்டுதனமான வில்லனாக நடித்திருந்தார் சூர்யா. இதுவரை ஹீரோ கதாபாத்திரங்களுக்கே முக்கியதுவம் அளித்து நடித்து வந்த அவர் திடீரென வெறிதனமான வில்லனாக மாறியுள்ளார்.
விக்ரம் படத்தில் கடைசி 10 நிமிடங்களே வந்த சூர்யா, அப்படத்தின் ஒட்டுமொத்த கதாபாத்திரங்களையும் தூக்கி சாப்பிட்டு விட்டார் என்றே கூறலாம்.

சூர்யாவின் பதிவு
இந்நிலையில் தற்போது சூர்யா Rolex கதாபாத்திரத்திற்காக தனது லுக்கிற்கு காரணமாக இருந்த வடிவமைப்பாளருடன் அவர் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
சூர்யா Rolex கெட்டப்-ல் உள்ள அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

2022 - இதுவரை வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல்