கமல்ஹாசன் பிறந்தநாள் பார்ட்டியில் பிரபல பாலிவுட் நடிகருடன் சூர்யா எடுத்துக் கொண்ட செல்பி- செம வைரல்
கமல்ஹாசன்
இந்திய சினிமாவில் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கக் கூடியவர் நடிகர் கமல்ஹாசன்.
வந்தோம், சில ஸ்டைல் காட்டி நடித்தோம், காதல் படங்களால் ஹிட் கொடுத்தோம் என்றில்லாமல் வித்தியாசமான படங்கள் நடித்து தனித்துவமான நடிகராக விளங்கினார்.
தீர விசாரிப்பது தான் சரி, கமலுக்கு தன் ஸ்டைலில் வாழ்த்து சொன்ன பிக்பாஸ் பிரபலம் ப்ரதீப்- இதோ பாருங்க
அவர் படங்களின் மூலம் சினிமா மீது ஆசைப்பட்டு இந்த துறையில் நுழைந்த கலைஞர்களும் பலர் உள்ளார்கள்.
இன்று கமல்ஹாசன் அவர்கள் தனது 69வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை மனதார தெரிவித்து வருகிறார்கள்.
வைரல் போட்டோ
நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளையொட்டி பிரபலங்களுக்கு பிறந்தநாள் பார்ட்டி கொடுத்துள்ளார். தமிழ் சினிமா பிரபலங்கள் அனைவரும் கலந்துகொள்ள பாலிவுட் நடிகர் அமீர்கானும் வந்துள்ளார்.
அந்த பார்ட்டியில் நடிகர் சூர்யா மற்றும் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இருவரும் பாலிவுட் நடிகர் அமீர்கானுடன் செல்பி எடுத்துள்ளனர்.
இதோ அவர்களின் வைரல் செல்பி போட்டோ,