விஜய்யின் பெயரை கூட சொல்லாத சூர்யா ! ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்திய வீடியோ..
மாஸ்ஸாக ரிலீஸான சூர்யாவின் ET
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் இன்று உலகளவில் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது.
சூர்யா நடித்துள்ள இந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் செம மாஸ் கமெர்ஷியல் படமாக உள்ளதால், ரசிகர்களிடையே மட்டுமின்றி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியாகியிருந்த இரண்டு திரைப்படங்களும் நேரடியாக OTT தளத்தில் வெளியாகியது. இதனிடையே 2 வருடங்களுக்கு பிறகு சூர்யாவின் திரைப்படம் திரையரங்கில் வெளியாகியுள்ளத்தால் வசூல் சாதனை படைக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்நிலையில் ET படத்தின் ப்ரோமோஷன் பணிகள் பல இடங்களில் நடைபெற்றது, அந்த வகையில் கேரளாவில் நடந்த இப்படத்தின் ப்ரோமோஷனில் சூர்யாவும் கலந்து கொண்டுள்ளார்.
ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்திய சூர்யாவின் பேச்சு
அப்போது அவர் மேடையில் பேசியது தான் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது, அதன்படி சூர்யா நேருக்கு நேர் படத்தின் போது ரசிகர்கள் மற்ற ஒரு நடிகருக்கு கொடுத்த ஆதரவு தனக்கும் கிடைக்க வேண்டும் ஆசைப்பட்டதாக சொல்லியுள்ளார்.
நேருக்கு நேர் படத்தின் ஷூட்டிங்கின் பொது சூர்யாவுடன் விஜய் தான் இருந்தார், விஜய்க்கு அப்போது ரசிகர்கள் கொடுத்த ஆதரவை தான் சூர்யா அவரின் பெயரை கூட சொல்லாமல் பேசியுள்ளார், என விஜய்யின் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
suriya himself told this story 2 or 3 times but all of the time he mentioned vijay name ?
— Master Adarsh ?️ (@ItzAdarsh) March 10, 2022
but during his ET press meet he just mentioned another actor ?
but Thalapathy still calling nanbar ajith , suriya in his AL's ❤️#Beast pic.twitter.com/TfNtarolml

அரபிக் குத்துக்கு ஸ்டேப் போட்ட தளபதி 66 பட நாயகி ! அதுவும் பாலிவுட் நடிகருடன்..