சூர்யா வாடிவாசல் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம் ! நடிகரின் புதிய அவதாரம்..
ரசிகர்களை கவர்ந்த ET
தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
செம மாஸ் கமெர்சியல் படமான எதற்கும் துணிந்தவன் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குடும்ப ரசிகர்களை கவர்ந்துள்ள இப்படம் பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது.
இதனிடையே இப்படத்தை தொடர்ந்து சூர்யா இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் ஏப்ரல் மாதம் தொடங்கும் எனவும் தகவல் பரவி வந்தன.

பாலா படத்தை முடித்த பிறகே சூர்யா வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. வெற்றிமாறனும் அப்படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகளில் மும்மரமாக உள்ளார்.
வாடிவாசலில் இணைந்த முக்கிய நடிகர்
இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிகர் கருணாஸ் வெற்றிமாறனின் உதவி இயக்குனராக இணைந்துள்ளார். சினிமாவில் பல விஷயங்களை செய்துள்ள கருணாஸ் தற்போது உதவி இயக்குனராகவும் மாறியுள்ளார்.
இது குறித்து கருணாஸ் "போலி வியாபார அரசியலை புறந்தள்ளிவிட்டு எனது கலைதாய் வீட்டுக்கு மீண்டும் திரும்புயிருக்கிறேன். நீண்டகாலமாக எனக்குள் இருந்த உதவி இயக்குனர் கனவை வாடிவாசலே வாசல் திறந்து விட்டிருக்கிறது" என பேசியுள்ளார்.

கடற்கரையில் நடிகை திரிஷா எடுத்த வீடியோ, அதனை பதிவிட்டு அவர் சொன்ன விஷயம் !