போர் தொழில் - டக்கர் படங்களின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா
டக்கர் வசூல்
கார்த்திக் ஜி. க்ரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடித்து நேற்று வெளிவந்த திரைப்படம் டக்கர். இப்படத்தில் கதாநாயகியாக திவ்யன்ஷா கௌஷிக் என்பவர் நடித்திருந்தார்.

நிவாஸ் கே. பிரசன்னா இசையில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் முதல் நாள் மட்டுமே சுமார் ரூ. 2.43 கோடி வரை வசூல் செய்துள்ளது என அறிவித்துள்ளனர்.
போர் தொழில் வசூல்
அதே நாளில் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் போர் தொழில். விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்க நிகிலா விமல் மற்றும் சரத் பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த இப்படம் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாக இப்படத்திற்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், முதல் நாள் வசூல் மட்டுமே ரூ. 1 கோடிக்கும் மேல் வந்துள்ளது.

நேற்றைய வசூல் சற்று குறைவாக இருந்தாலும், இன்றிலிருந்து இப்படம் மக்கள் மத்தியில் பிக் அப் ஆகும் என தெரியவந்துள்ளது. இதனால் கண்டிப்பாக இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா? வாங்க தெரிஞ்சிக்கலாம்