தமிழ் திரையுலக முன்னணி நடிகர்கள் வைத்துள்ள விலையுர்ந்த கார்கள்..
தமிழ் சினிமாவின் திரைப்படங்களுக்கு இன்று உலகளவில் மார்க்கெட் பெரிதாகி இருப்பது, அனைவரும் அறிந்த விஷயம். மேலும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களும் கோடிக்கணக்கில் வசூலை அளிக்குவித்து வருகிறது. அதன்படி இங்குள்ள டாப் நடிகர்களும் தங்களின் பட்ஜெட்டிற்கு நிகராக சம்பளம் பெற்று வருகிறார்கள், அந்த வகையில் டாப் நடிகர்கள் வைத்துள்ள விலையுர்ந்த கார்கள் குறித்த பட்டியலை தான் தற்போது பார்க்க இருக்கிறோம்.
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் Lamborghini Urus என்ற விலையுர்ந்த காரை வாங்கியுள்ளார். உலகளவில் பிரபல Lamborghini-யின் இந்த Urus காரின் விலை ரூ.3.75 கோடி இருக்குமாம். அதுமட்டுமின்றி ரூ.87 லட்சம் மதிப்புள்ள BMW X5 காரையும் வைத்துள்ளார் ரஜினி.
கமல்
உலகநாயகன் கமல்ஹாசன் Range Rover Evoque காரை வைத்துள்ளார், மிகவும் பிரபலமான இந்த காரை கமல் கடந்த 2012 ஆம் ஆண்டு வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கார் விற்பனைக்கு வரும் நேரத்தில் அதன் மதிப்பு ரூ.44 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்
தமிழ் சினிமாவின் டாப் நடிகரான விஜய் உலகளவில் விலையுர்ந்த காராக கருதப்படும் Rolls-Royce Ghost வைத்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு அவர் இந்த காரை வாங்கியுள்ளார், கோலிவுட் வட்டாரத்தில் இந்த காரை வாங்கிய இரண்டாவது நபர் விஜய். இந்த காரின் இந்திய மதிப்பு ரூ.8 கோடிக்கும் அதிமாக இருக்கும்.
அஜித்
மற்றுமொரு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் அதிவேகமான Ferrari 458 Italia காரை வைத்துள்ளார். இந்த காரின் இந்திய மதிப்பு ரூ.4.80 கோடி இருக்குமாம், அதுமட்டுமின்றி அஜித் விலையுர்ந்த பைக்ஸ் காலெக்ஷன்களை வைத்திருக்கிறார்.
சூர்யா
நடிகர் சூர்யா Audi A7, BMW 7-Series, Porsche Cayenne என்ற மூன்று விலையுர்ந்த கார்களை வைத்துள்ளார். Audi A7-ம் விலை ரூ.90 லட்சம், BMW 7-Series-ன் விலை ரூ 1.40 கோடி, Porsche Cayenne-ன் விலை ரூ.1.50 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம்
சீயான் விக்ரம் Audi நிறுவனத்தின் Audi R8 காரை வைத்திருக்கிறார், மிகவும் ஸ்டைலிஷான அந்த காரில் இரண்டு நபர்கள் மட்டுமே உட்கார முடியும். அதிக வேக காரான Audi R8 இந்திய மதிப்பு ரூ 2.70 கோடி இருக்குமாம்.
தனுஷ்
தமிழ் சினிமாவின் டாப் நடிகரான தனுஷ் விலையுர்ந்த இரண்டு கார்களை வைத்துள்ளார். அதன்படி Bentley Continental Flying Spur என்ற மிகவும் ஆடம்பரமான காரை வைத்துள்ள வெகுசில நடிகர்களில் தனுஷும் ஒருவர். இந்த காரின் இந்திய மதிப்பு ரூ 3.40 கோடி இருக்கும். அதுமட்டுமின்றி மற்றுமொரு ஆடம்பரமான Rolls Royce Ghost காரை வைத்திருக்கிறார் தனுஷ். இந்த காரின் மதிப்பு ரூ 7-8 கோடி அளவில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனது மனைவி இப்படியொரு தியாகம் செய்துள்ளார் - புதுமண தம்பதிகளின் அழகான புரிதல்..