தலைவா திரைப்படம் வெளியாவதில் ஏற்பட்ட சிக்கல் ! விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த ஒரே நடிகர் யார் தெரியுமா
விஜய்
தமிழ் சினிமா உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் கடந்த சில வருடங்களாக விஜய்யின் திரைப்படம் சிக்கல் இல்லாமல் வெளிவந்ததில்லை. அப்படி விஜய் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தலைவா.
அப்படத்தின் டைட்டில் பிரச்சனை காரணமாக அப்படம் வெளியாவதில் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் தலைவா குறித்த தேதியில் வெளியாகவில்லை, மேலும் அப்படம் முதல் நாளே இணையத்தில் வெளியாகிவிட்டது.
ஆதரவாக சிம்பு செய்த விஷயம்
அப்போது விஜய்க்கு ஆதரவாக நடிகர் சிம்பு மட்டும் ரசிகர்களுக்காக டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். ஆம், அதில் விஜய் ரசிகர்களை அமைதி காக்கும் படி சிம்பு ஆதரவாக பதிவிட்டு இருந்தார்.
மேலும் இன்றுடன் தலைவா திரைப்படம் வெளியாகி 9 வருடங்கள் ஆகியுள்ளதால் தற்போது விஜய் ரசிகர்கள் #9YrsOfHistoricThalaivaa என்ற ஹாஷ்டேக் உடன் தலைவா குறித்த சுவாரஸ்யமான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
அதில் விஜய் சிம்பு தான் தலைவா திரைப்படத்தின் சிக்கலின் போது முதல் ஆளாக குரல் கொடுத்தார் என பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் முதல்முறையாக நடித்த காட்சி

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
