ரஜினியின் 170 வது திரைப்படத்தில் இணைந்த இளம் நடிகை! மொத்தம் இத்தனை நடிகர்களா?
ரஜினி
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தலைவர் 170
இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து ரஜினி லைக்கா நிறுவனம் தயாரிப்பில் டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும் அதற்குள் அப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.
அதன்படி அரவிந்த் சாமி, வடிவேலு உள்ளிட்ட நடிகர்களை இளம் நடிகை கல்யாணி பிரியதர்ஷினியும் இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

தன் தோழியின் கணவரை இரண்டாம் திருமணம் செய்யும் ஹன்சிகா